/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கிணற்றில் விழுந்து பலியான வாலிபர் துாளி கட்டி சுமந்து சென்ற மக்கள்
/
கிணற்றில் விழுந்து பலியான வாலிபர் துாளி கட்டி சுமந்து சென்ற மக்கள்
கிணற்றில் விழுந்து பலியான வாலிபர் துாளி கட்டி சுமந்து சென்ற மக்கள்
கிணற்றில் விழுந்து பலியான வாலிபர் துாளி கட்டி சுமந்து சென்ற மக்கள்
ADDED : மே 23, 2025 01:53 AM
ராசிபுரம், ராசிபுரம் அருகே, கிணற்றில் விழுந்து பலியான போதமலை வாலிபரை, கிராம மக்கள் துாளி கட்டி சுமந்து சென்றனர்.
ராசிபுரம் அருகே போதமலையில் மேலுார், கீழூர், கெடமலை என, மூன்று மலை கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில், 1,500க்கும்மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மலை கிராமத்திற்கு செல்ல வேண்டுமானால், நடைபாதையாகத்தான் செல்லமுடியும். தேர்தல் நேரத்தில் கூட அதிகாரிகள் ஓட்டு பெட்டிகளை சுமந்துதான் செல்வர்.
இந்நிலையில் எட்டு மாதங்களுக்கு முன், எம்.பி., ராஜேஸ்குமார் முன்னிலையில் போதமலைக்கு, 148 கோடி ரூபாய் மதிப்பில் சாலை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. தற்போது சாலை அமைக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை போதமலையை சேர்ந்த பிசத்தமுத்து மகன் சதாசிவம், 27, பட்டணம் முனியம்பாளையம் அருகே சாலையோரத்தில் உள்ள கிணற்றில் தவறி விழுந்து இறந்தார்.
ராசிபுரம் தீயணைப்பு வீரர்கள், சதாசிவத்தின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். நாமகிரிப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் பிரேத பரிசோதனைக்கு பிறகு, கீழுருக்கு உறவினர்கள் சடலத்தை எடுத்து சென்றனர். சாலைவசதி இல்லாததால் சடலத்தை துாளி கட்டி, 8 கி.மீ., துாரம் சுமந்து சென்றனர்.