/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
. ஆழ்துளை கிணற்றை சீரமைக்க ரூ.3.95 லட்சம் ஒதுக்கீடு வேலையே செய்யாமல் பணம் எடுப்பதாக மக்கள் புகார்
/
. ஆழ்துளை கிணற்றை சீரமைக்க ரூ.3.95 லட்சம் ஒதுக்கீடு வேலையே செய்யாமல் பணம் எடுப்பதாக மக்கள் புகார்
. ஆழ்துளை கிணற்றை சீரமைக்க ரூ.3.95 லட்சம் ஒதுக்கீடு வேலையே செய்யாமல் பணம் எடுப்பதாக மக்கள் புகார்
. ஆழ்துளை கிணற்றை சீரமைக்க ரூ.3.95 லட்சம் ஒதுக்கீடு வேலையே செய்யாமல் பணம் எடுப்பதாக மக்கள் புகார்
ADDED : செப் 10, 2025 12:58 AM
நாமகிரிப்பேட்டை, நாமகிரிப்பேட்டை யூனியன், முள்ளுக்குறிச்சி பஞ்.,ல் ஆழ்துளை கிணற்றை சீரமைக்க ஒதுக்கப்பட்ட, 3.95 லட்சம் ரூபாயை, பணியே நடக்காமல் பணத்தை மட்டும் எடுத்து மோசடி செய்வதாக, அப்பகுதி மக்களிடையே குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை யூனியன், முள்ளுக்குறிச்சி பஞ்., காந்தி நகர், மயானம் அருகே ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டுள்ளது. இந்த கிணற்றை துார்வாரி ஆழப்படுத்தி சீரமைக்க வறட்சி நிவாரண பணிகள்-2024-25 திட்டத்தின் கீழ், 3.95 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்த பணிகளை முடிக்காமல், எவ்வித பணிகளையும் மேற்கொள்ளாமல் பணத்தை எடுத்துவிட்டதாக புகார் எழுந்துள்ளது. ஆழ்துளை கிணற்றை சுற்றி கூட சுத்தம் செய்யவில்லை. பைப் இணைப்பை கூட கொடுக்காமல் பணியை முடித்துள்ளதாக அறிவிப்பு பலகை வைத்துள்ளதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என,
இப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, முள்ளுக்குறிச்சி ஊராட்சி செயலர் வெங்கடேஷிடம் கேட்டபோது, ''காந்திநகர் பகுதியில் உள்ள ஆழ்துளை கிணறை சீரமைக்க பணம் ஒதுக்கப்பட்டது. அப்போது பணிக்கான போர்டை எழுதிவிட்டனர். ஆனால், துார்வார வண்டியை அழைத்து வந்தபோது, ஆழ்துளை கிணற்றை துார்வார முடியாது எனத்தெரிவித்துவிட்டனர். இதனால், அதை அப்படியே விட்டுவிட்டோம். பில் எதுவும் அவர்களுக்கு கொடுக்கவில்லை. பணி தொடங்குவதற்காக எழுதப்பட்ட போர்டை அழிக்க மறந்துவிட்டோம்,'' என்றார்.
முள்ளுக்குறிச்சி அடுத்த ஊனாந்தாங்கல் கிராமத்தில், ஏற்கனவே விளையாட்டு மைதானம் அமைக்க ஒதுக்கப்பட்ட தொகையும், பணியே நடக்காமல் நிதியை மட்டும் எடுத்து மோசடி செய்துள்ளதாக, பா.ஜ., சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆழ்துளை கிணற்றை சீரமைக்க ஒதுக்கப்பட்ட நிதியும் கேள்விக்
குறியாகவே உள்ளது.