/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அடிப்படை வசதிக்கு மக்கள் கோரிக்கை
/
அடிப்படை வசதிக்கு மக்கள் கோரிக்கை
ADDED : ஏப் 07, 2025 02:00 AM
வெண்ணந்துார்: வெண்ணந்துார் அருகே, அத்தனுார் டவுன் பஞ்.,க்குட்பட்ட, 5-வது வார்டு எம்.ஜி.ஆர்., காலனி பகுதியில், 100க்கும் மேற்-பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இப்பகுதியில் குடிநீர், கழிப்பறை, சாக்கடை கால்வாய், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தராததால், அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குடிநீருக்காக, ஒரு கிலோ மீட்டர் துாரம் செல்ல வேண்டிய நிலையுள்ளது. இதுகுறித்து சம்-பந்தப்பட்ட அத்தனுார் டவுன் பஞ்., 5-வது வார்டு எம்.ஜி.ஆர்., பகுதி மக்கள் டவுன் பஞ்., அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை மனு அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க-வில்லை. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், அடிப்படை வச-திகளை செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அத்-தனுார் டவுன் பஞ்., மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.