/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஆபத்தான மின் கம்பம் அகற்ற மக்கள் கோரிக்கை
/
ஆபத்தான மின் கம்பம் அகற்ற மக்கள் கோரிக்கை
ADDED : ஏப் 19, 2025 01:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேந்தமங்கலம்:
கொல்லிமலை தாலுகா, சோளக்காட்டில், தார்ச்சாலை அருகே அப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக, மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டப்பட்டுள்ளது. இந்த தொட்டி அருகே, கடந்த, 20ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட மின் கம்பம் உள்ளது. இந்த மின் கம்பம் சாய்ந்தபடி, எப்போது விழும் என்ற நிலையில் உள்ளது.
மழை பெய்யும்போது, மண் சரிவு ஏற்பட்டு மின் கம்பம் சாயும் அபாயம் உள்ளது. எனவே, ஆபத்தான இந்த மின் கம்பத்தை அகற்றி, வேறு இடத்தில் வைக்க வேண்டும் என, சோளக்காடு பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.