/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
விடுமுறை முடிந்து வெளியூர் செல்ல புதிய பஸ் ஸ்டாண்டில் திரண்ட மக்கள்

ADDED : ஜன 20, 2025 07:00 AM
நாமக்கல்: பொங்கல் விடுமுறை முடிந்து, வெளியூர் செல்வதற்காக நாமக்கல் புதிய பஸ் ஸ்டாண்டில் ஏராளமான பயணிகள் திரண்டனர்.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு தொடர் விடுமுறை விடப்பட்டிருந்தது. நேற்றுடன் விடுமுறை முடிந்து, இன்று முதல் இயல்பு வாழ்க்கை தொடங்குகிறது. அதைதொடர்ந்து, பள்ளி, கல்லுாரி, அரசு மற்றும் தனியார் நிறுவன அலுவலர்கள் என பலரும் பணிக்கு, கல்வி நிலையங்களுக்கு திரும்பினர்.
அதற்காக, நாமக்கல் பஸ் ஸ்டாண்டில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக, ஈரோடு பஸ்சில், சிறுவர் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் முண்டியடித்துக்கொண்டு ஏறுவதை காணமுடிந்தது. மேலும், தாங்கள் செல்லும் ஊருக்கு வரவேண்டிய பஸ்சிற்காக ஏராளமான பயணிகள் பஸ் ஸ்டாண்டில் காத்திருந்தனர். பயணிகளின் வசதிக்காக, தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில், சிறப்பு பஸ் இயக்கப்பட்டது. குறிப்பாக, ஈரோட்டிற்கு, 30 பஸ், திருச்சிக்கு, 25 பஸ், துறையூருக்கு, 10 பஸ், சென்னைக்கு முன்பதிவு செய்த, 20 பஸ்கள் என, மொத்தம், 85 பஸ்கள், நேற்று இரவு இயக்கப்பட்டன.