ADDED : மே 11, 2024 06:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாமக்கல் : தமிழகத்தில் தங்க நகைகள் பயன்பாடு மற்றும் விற்பனை அதிகம் உள்ளது. அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால் வீட்டில் செல்வம் பெருகும் என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது. அதன்படி, இந்தாண்டு அட்சய திருதியை நாள், நேற்று துவங்கி, மூன்று நாட்கள் கொண்டாடப்படுகிறது. முதல் நாளான நேற்று, நாமக்கல் கடை வீதியில் உள்ள தங்க நகைக்கடைக்கு மக்கள் படையெடுத்தனர்.
அதனால், கடைவீதியில் மக்கள் கூட்டம் அலைமோதியது. தங்களின் வாடிக்கையான கடைகளுக்கு சென்ற பொதுமக்கள், தங்க காசு, செயின், வளையல், மோதிரம், பிரேஸ்லெட், தோடு போன்ற தங்க நகைகளை வாங்கி சென்றனர். இதனால் கடைவீதியில் வழக்கத்தைவிட கூட்டம் அதிகரித்ததால் போக்குவரத்து ஸ்தம்பித்தது.