/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
குடிநீர் குழாய் செல்லும் பாதையில் சாலை அமைக்க மக்கள் எதிர்ப்பு
/
குடிநீர் குழாய் செல்லும் பாதையில் சாலை அமைக்க மக்கள் எதிர்ப்பு
குடிநீர் குழாய் செல்லும் பாதையில் சாலை அமைக்க மக்கள் எதிர்ப்பு
குடிநீர் குழாய் செல்லும் பாதையில் சாலை அமைக்க மக்கள் எதிர்ப்பு
ADDED : ஜூலை 17, 2025 02:37 AM
ப.வேலுார், பரமத்தி அருகே, வெள்ளாளபாளையம் கிராமத்தில் வானங்கள் செல்ல சர்வீஸ் ரோடு மற்றும் மழைநீர் செல்லவும், சாக்கடை வசதி அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சர்வீஸ் ரோடு மற்றும் சாக்கடைக்கு அருகே மற்றொரு சர்வீஸ் ரோடு அமைக்கவும், அப்பகுதியில் கனரக வாகனங்கள் செல்லவும் சாலை அமைக்க பரமத்தி கிராம நிர்வாக அலுவலர் ராஜ்குமார் மற்றும் சர்வேயர் கார்த்திகேயன் மூலம் நில அளவீடு செய்யும் பணி, நேற்று நடந்தது.
இதற்கு அப்பகுதியில் உள்ள பத்துக்கு மேற்பட்ட குடியிருப்பு வாசிகள், வணிக நிறுவன உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அப்பகுதியில் மீண்டும் மற்றொரு சர்வீஸ் சாலை அமைத்தால், அப்பகுதியில் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு உள்ளே செல்ல முடியாத சூழ்நிலை ஏற்படும். மேலும் பரமத்தி டவுன் பஞ்.,க்குட்பட்ட பகுதிகளில் காவிரி குடிநீர் பிரதான பைப்பு அப்பகுதியில் செல்வதால் சாலை அமைத்தால் குடிநீர் பைப் உடைந்து குடிநீர் சப்ளைக்கு பாதிப்பு ஏற்படலாம்.
ஏற்கனவே, சர்வீஸ் சாலை இருக்கும்போது தனிப்பட்ட நபர்களின், கனரக வாகனங்களுக்காக சாலை அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
மற்றோரு சர்வீஸ் சாலை அமைத்தால் குடிநீர் பைப்பு பாதிக்கப்படும், என பொதுமக்கள் மற்றும் அப்பகுதியினர் பரமத்தி வேலுார் வட்டாட்சியர் அலுவலகத்தில் சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மனு கொடுத்தனர்.
ஏற்கனவே, சர்வீஸ் சாலை இருக்கும்போது, காவிரி குடிநீர் பைப்பு செல்லும் பாதையில் சாலை அமைக்க வருவாய்த்துறையினர் எடுத்துக்கொண்ட முயற்சியால்
அப்பகுதி பொதுமக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.