/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
திருநங்கைகளுக்கு இலவச நிலம் அளவீடு செய்ய மக்கள் எதிர்ப்பு
/
திருநங்கைகளுக்கு இலவச நிலம் அளவீடு செய்ய மக்கள் எதிர்ப்பு
திருநங்கைகளுக்கு இலவச நிலம் அளவீடு செய்ய மக்கள் எதிர்ப்பு
திருநங்கைகளுக்கு இலவச நிலம் அளவீடு செய்ய மக்கள் எதிர்ப்பு
ADDED : ஜூலை 17, 2025 01:48 AM
திருச்செங்கோடு, நாமக்கல்லில், கடந்த, 10ல் நடந்த அரசு நிகழ்ச்சியில், 33 திருநங்கைகளுக்கு, துணை முதல்வர் உதயநிதி, திருச்செங்கோடு வரகூராம்பட்டி எல்லைக்காடு பகுதியில் நிலம் ஒதுக்கி, இலவச வீட்டுமனை பட்டா வழங்கியிருந்தார். அந்த நிலத்தை சர்வேயர்கள் அளவீடு செய்ய வந்தபோது, கிராமமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தகவலறிந்து வந்த திருச்செங்கோடு டவுன் இன்ஸ்பெக்டர் வளர்மதி, இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது,
கிராம மக்கள், 'திருநங்கைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிலம், பல ஆண்டுகளாக கிராமத்தினர் அனைவரும் பயன்படுத்தி வருகிறோம். பட்டாவில் இந்த இடம் தான் என குறிப்பிடப்படவில்லை. திருநங்கைகளுக்கு வேறு இடத்தில் பட்டா போட்டு கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கேட்டுக்கொண்டனர். இதனால் வரகூராம்பட்டி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.