/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
குப்பை கொட்டுவதால் மாசு கலெக்டரிடம் மக்கள் மனு
/
குப்பை கொட்டுவதால் மாசு கலெக்டரிடம் மக்கள் மனு
ADDED : பிப் 21, 2024 01:33 AM
நாமக்கல்;சவுதாபுரம் கிராம மக்கள், நாமக்கல் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
பள்ளிப்பாளையம் யூனியன், சவுதாபுரம் பஞ்.,க்குட்பட்ட இடத்தில், குமாரபாளையம் தாலுகாவில் உள்ள கிராம பஞ்.,களில் சேகரிக்கப்படும் குப்பை உள்ளிட்ட கழிவு பொருட்களை கொட்டுவதற்கு இடத்தை ஆய்வு செய்துள்ளனர். இந்த ஆய்வு பணியில், டி.ஆர்.ஓ., - ஆர்.டி.ஓ., - வி.ஏ.ஓ., உள்ளிட்ட வருவாய் துறையினர் ஈடுபட்டனர். எங்கள் கிராமத்தில், 1,200 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். குப்பையை கொட்டி குவிக்கப்படும் பகுதி வழியாகத்தான், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர், பொதுமக்கள் சென்று வருவர்.
இந்நிலையில், வெளியிடத்தில் இருந்து இங்கு கொண்டு வந்து குவிக்கும் குப்பை குவியல் மூலம், கிராமம் மாசடைவதுடன், சுற்றுச்சூழல் சீர்கேடு அபாயம் உள்ளது. மேலும், நிலத்தடி நீர் மாசடைந்து, குடிக்கும் நீரும், நச்சுத்தன்மையாக மாறிவிடும் அவலம் உள்ளது. கிராம மக்களின் நிலையை கருத்தில் கொண்டு, எங்கள் பகுதியில், குப்பையை கொட்டுவதை தவிர்த்து, மாற்று இடத்தை தேர்வு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

