/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
காலி குடங்களுடன் மக்கள் போராட்டம்
/
காலி குடங்களுடன் மக்கள் போராட்டம்
ADDED : ஜூலை 01, 2025 01:22 AM
பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம் நகராட்சிக்குட்பட்ட பழைய போலீஸ் ஸ்டேஷன் வீதியில், 40க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதிக்கு நகராட்சி சார்பில், 'அம்ரூத்' திட்டத்தில் வீடுதோறும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில், புதிய குடிநீர் திட்டத்தில் தண்ணீர் சீராக வராததால், அப்பகுதி மக்கள், நேற்று மாலை காலிகுடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது: பழைய போலீஸ் ஸ்டேஷன் வீதி பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. நகராட்சி சார்பில், புதிய குடிநீர் திட்டத்தில் வீடுதோறும் இணைப்பு வழங்கப்பட்டது.
கடந்த ஒரு மாதமாக தண்ணீர் வருகிறது. ஆனால், ஒரு குடம் நிரம்ப, 10 நிமிடமாகிறது. அந்தளவுக்கு தண்ணீர் மிகவும் குறைவாக வருகிறது. இதனால் தண்ணீர் பற்றாக்
குறையால், மக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.
இதனால், நேற்று காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டு எங்களின் எதிர்ப்பை தெரிவித்துள்ளோம். தண்ணீர் சீராக வழங்கவில்லை என்றால், அடுத்த கட்டமாக பிரதான சாலையிலும், நகராட்சி அலுவலகம் முன்பும் போராட்டத்தில் ஈடுபடுவோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.