/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கருமை நிறத்தில் வந்த குடிநீரால் மக்கள் அதிர்ச்சி
/
கருமை நிறத்தில் வந்த குடிநீரால் மக்கள் அதிர்ச்சி
ADDED : மே 29, 2025 01:52 AM
பள்ளிப்பாளையம் பள்ளிப்பாளையம் யூனியன், களியனுார் பஞ்சாயத்துக்குட்பட்ட ஆவத்திபாளையம் அடுத்த வ.உ.சி., நகர் பகுதியில், கருமை நிறத்துடன் குடிநீர் வந்ததால், அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: களியனுார் பஞ்சாயத்துக்குட்பட்ட வ.உ.சி., நகர் பகுதிக்கு பஞ்., மூலம் ஆற்று தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. பஞ்சாயத்து மூலம் வழங்கும் குடிநீர், சில நாட்களாக நுரையுடன் காணப்பட்டது. மேலும், துர்நாற்றத்துடன், கருமை நிறத்தில் குடிநீர் வருகிறது.
மேல்நிலை தொட்டி சுத்தம் செய்யாமல் இருப்பதால், இவ்வாறு குடிநீர் வருகிறது.
இல்லையெனில் சாயக்கழிவுநீர் கலந்தாலும் இதுபோல குடிநீர் வரும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்ய வேண்டும்.
இது குறித்து பஞ்சாயத்து நிர்வாகத்திடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. துாய்மையான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கூறினர்.