/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
'பிளாஸ்டிக் பைகளுக்கு பதில் துணிப்பை பயன்படுத்த மக்கள் முன்வர வேண்டும்'
/
'பிளாஸ்டிக் பைகளுக்கு பதில் துணிப்பை பயன்படுத்த மக்கள் முன்வர வேண்டும்'
'பிளாஸ்டிக் பைகளுக்கு பதில் துணிப்பை பயன்படுத்த மக்கள் முன்வர வேண்டும்'
'பிளாஸ்டிக் பைகளுக்கு பதில் துணிப்பை பயன்படுத்த மக்கள் முன்வர வேண்டும்'
ADDED : ஜூன் 05, 2025 01:24 AM
நாமக்கல், ''பிளாஸ்டிக் பைகளுக்கு பதில், துணிப்பைகளை பயன்படுத்த அனைவரும் முன்வர வேண்டும்,'' என, திறன் மேம்பாட்டு பயிற்சி முகாமில், கலெக்டர் உமா பேசினார்.
நாமக்கல் மாநகராட்சி மற்றும் மாவட்ட காலநிலை இயக்கம் சார்பில், 'நெகிழி பொருட்கள், காலநிலை மாற்றம், வியாபாரிகளுக்கான சவால்கள் மற்றும் தீர்வுகள்' என்ற தலைப்பில், காலநிலை மாற்றம் குறித்த திறன் மேம்பாடு பயிற்சி நடந்தது. மாநகராட்சி மேயர் கலாநிதி, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின், நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் வெள்ளையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கலெக்டர் உமா தலைமை வகித்து பேசியதாவது: நாமக்கல் மாவட்டத்தில், கடந்த மே மாதம், அதிகளவில் வெயில் தாக்கம் இருந்தது. அதே சமயம், அதிகளவில் மழைப்பொழிவும் கிடைக்கப்பெற்றது. வழக்கமாக, மே மாதத்தில் கோடை வெயில் தாக்கம் இருக்கும் சூழலில், தற்போது காலநிலை மாற்றம் ஏற்பட்டு மழைப்பொழிவும் கிடைக்கப்பெற்றது.
காலநிலை மாற்றம் காரணமாக புதிய நோய் தொற்றும் ஏற்பட வழி வகுக்கிறது. இயற்கை மாசுபாடும், காலநிலை மாற்றத்திற்கு காரணமாக விளங்குகிறது. அதிக அளவு நெகிழி பயன்பாட்டால், இயற்கை வளம் பெரிதளவில் பாதிப்புக்குள்ளாகிறது.
இந்தியாவில், 148 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், 12 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டுள்ளது. அதில், முதல் ஐந்து மாவட்டங்களில் நாமக்கல் இடம்பெற்றுள்ளது. பொதுமக்கள் அனைவரும், அன்றாட தேவைகளுக்கு கடைகளுக்குச் செல்லும்போது, பிளாஸ்டிக் பைகளுக்கு பதில், துணிப்பைகளை பயன்படுத்த அனைவரும் முன்வர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். துணை மேயர் பூபதி, மாநகராட்சி கமிஷனர் சிவக்குமார்,
சுகாதார அலுவலர் திருமூர்த்தி உள்பட பலர் பங்கேற்றனர்.