/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அய்யர்மலையில் கழிவுநீர் துர்நாற்றத்தால் மக்கள் அவதி
/
அய்யர்மலையில் கழிவுநீர் துர்நாற்றத்தால் மக்கள் அவதி
அய்யர்மலையில் கழிவுநீர் துர்நாற்றத்தால் மக்கள் அவதி
அய்யர்மலையில் கழிவுநீர் துர்நாற்றத்தால் மக்கள் அவதி
ADDED : நவ 26, 2024 01:44 AM
அய்யர்மலையில் கழிவுநீர்
துர்நாற்றத்தால் மக்கள் அவதி
குளித்தலை, நவ. 26-
குளித்தலை அடுத்த, சத்தியமங்கலம் பஞ்., அய்யர்மலையில் ரத்தினகிரீஸ்வரர் கோவில் உள்ளது.
இந்த கோவிலுக்கு நேற்று, சோமவாரத்தை முன்னிட்டு குடிப்பாட்டுக்காரர்கள், பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வந்து ரோப் காரில் மலைக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தனர். கோவில் மலை உச்சியில் படிக்கட்டில் இருந்து, மழை தண்ணீர் விழுந்து கோவில் அலுவலகம் வழியாக தெப்பக்குளத்திற்கு சென்று கொண்டிருந்தது.
இந்நிலையில் ஒரு மாதத்துக்கு முன்பு, கோவில் நிர்வாக அலுவலகம் அருகில் குழி பறித்து, கழிவு நீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது.
இதில் இருந்து துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும், கழிவு நீரில் தொற்று நோய் பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாகி வருகிறது. கோவிலுக்கு வரும் பக்தர்கள், பள்ளி, கல்லுாரி மாணவிகள் நலன் கருதி கோவில் நிர்வாகம் அலுவலக பின் பகுதியில் உள்ள, கழிவு நீர் முழுவதையும் அகற்றி, நோய் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என, ஹிந்து சமய அறநிலைய துறைக்கு பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.