/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கழிப்பிடம் இல்லாமல் பொதுமக்கள் அவதி
/
கழிப்பிடம் இல்லாமல் பொதுமக்கள் அவதி
ADDED : செப் 20, 2024 01:46 AM
கழிப்பிடம் இல்லாமல்
பொதுமக்கள் அவதி
நாமகிரிப்பேட்டை, செப். 20-
நாமகிரிப்பேட்டை ஒன்றியம், மங்களபுரம் ஊராட்சி, தாண்ட கவுண்டம்பாளையம் அம்பேத்கர் காலனியில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்கு தனி கழிப்பிடம் கட்ட போதுமான இட வசதி இல்லை. இதனால், பொது கழிப்பிடத்தை மட்டுமே நம்பி உள்ளனர். தற்போது அருகில் உள்ள பொது வெளியை கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர்.
இதனால், மழை காலங்களில் இப்பகுதி மக்கள் அவதிப்படுவதுடன், சுகாதார சீர்கேட்டாலும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, இப்பகுதியில் பொதுக் கழிப்பிடம் வேண்டி பல ஆண்டுகளாக அரசு அதிகாரிகளிடம் மனு கொடுத்து வருகின்றனர். ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், காலம் தாழ்த்தி வருகின்றனர். இந்நிலையில், மாவட்ட கலெக்டர், ஊரக வளர்ச்சி துறை அதிகாரி ஆகியோருக்கு இது குறித்து, பா.ஜ., மாநில நிர்வாகி லோகேந்திரன் புகார் மனு அனுப்பியுள்ளார்.