/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வடிகால் வசதி ஏற்படுத்தி தர மக்கள் வலியுறுத்தல்
/
வடிகால் வசதி ஏற்படுத்தி தர மக்கள் வலியுறுத்தல்
ADDED : ஜூலை 09, 2025 01:38 AM
எலச்சிபாளையம், செம்பாம்பாளையம் கிராமத்தில், வடிகால் வசதி அமைத்து தர வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எலச்சிபாளையம் யூனியன், நல்லிபாளையம் பஞ்., செம்பாம்பாளையம் பகுதியில், நுாற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் இதுவரை வடிகால் வசதி அமைக்கவில்லை. குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. குறிப்பாக மகளிர் சுய உதவி குழு கட்டடம், அங்கன்வாடி மையம் ஆகிய இடங்களில் நீண்ட நாட்களாக கழிவுநீர் சங்கமமாகி நிற்கிறது.
மேலும், இப்பகுதி மக்கள் கொசுக்கள் தொல்லையாலும் அவதிப்படுகின்றனர். எனவே, நீண்ட நாட்களாக தேங்கி நிற்கும் கழிவு நீரை அகற்றி விட்டு, வடிகால் வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.

