/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ப.பாளையம் படித்துறையில் எச்சரிக்கையை மீறும் மக்கள்
/
ப.பாளையம் படித்துறையில் எச்சரிக்கையை மீறும் மக்கள்
ப.பாளையம் படித்துறையில் எச்சரிக்கையை மீறும் மக்கள்
ப.பாளையம் படித்துறையில் எச்சரிக்கையை மீறும் மக்கள்
ADDED : ஜூலை 03, 2025 01:26 AM
பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம் படித்துறையில் எச்சரிக்கையை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பள்ளிப்பாளையம் அருகே, பெரியார் நகர் பகுதியில் காவிரி ஆற்றங்கரையோரம் படித்துறை உள்ளது. இந்த படித்துறையில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமானோர் குளிக்கவும், துணி துவைக்கவும் பயன்படுத்தி வருகின்றனர்.
தற்போது, ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால், இந்த படித்துறையில் குளிக்கவும், துணி துவைக்கவும் தடைவிதிக்கப்பட்டு எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது.
ஆனால், ஆபத்தை உணராமல் எச்சரிக்கை பலகையை மீறி, படித்துறை ஆற்றுப்பகுதியில் மக்கள் குளிக்க வருகின்றனர். இதனால் விபரீதம் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. எனவே, ஆற்றுப்பகுதியில் உள்ள படித்துறையில், பள்ளிப்பாளையம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.