ADDED : ஜன 20, 2025 07:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேந்தமங்கலம்: நாமக்கல் மாவட்டத்தில், கொல்லிமலை சுற்றுலா தலமாக உள்ளது. விடுமுறை நாட்களில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் வந்து செல்கின்றனர். பொங்கல் பண்டிகையையொட்டி, கடந்த, 12 முதல் தொடர் விடுமுறை விடப்பட்டது.
இதனால், கடந்த ஒரு வாரமாக சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது. விடுமுறையின் கடைசி நாளான நேற்று, நாமக்கல், ராசிபுரம், சேலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் கொல்லிமலைக்கு படையெடுத்தனர். இதனால், நேற்று மாலை சோளக்காட்டில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.