/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மண்சரிவை சரி செய்ய மக்கள் வலியுறுத்தல்
/
மண்சரிவை சரி செய்ய மக்கள் வலியுறுத்தல்
ADDED : மே 03, 2024 07:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மல்லசமுத்திரம்: மாரம்பாளையம்-ராமாபுரம் சாலையில் ஏற்பட்டுள்ள, மண் சரிவை சரி செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மல்லசமுத்திரம் அருகே, மாரம்பாளையத்தில் இருந்து ராமாபுரம் வரை அதிகளவில் இருசக்கர, கனரக, இலகுரக வாகனங்கள் சென்று வருகிறது. இச்சாலையில், 5 கி.மீ., தொலைவிற்கு சாலையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால், வாகனஓட்டிகள் சாலையை விட்டு சற்றுதள்ளி சென்றால், மண்சரிவில் சிக்கி, கீழே விழுகின்றனர். எனவே, மண் சரிவை சரி செய்ய, நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.