/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கொல்லிமலையில் மிளகு அறுவடை தீவிரம்
/
கொல்லிமலையில் மிளகு அறுவடை தீவிரம்
ADDED : ஏப் 13, 2025 04:15 AM
சேந்தமங்கலம்: கொல்லிமலையில் மிளகு அறுவடை சீசன் என்பதால், ஏராள-மான விவசாயிகள் அறுவடை செய்த மிளகை களத்தில் காய வைத்து தரம் பிரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கொல்லிமலையில், 14 பஞ்சாயத்து பகுதிகளில், 1,000 ஏக்கர் பரப்பளவில் மிளகு பயிரிடப்பட்டுள்ளது. இப்பகுதியில் விளையும் மிளகு, தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்க-ளுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.ஆண்டுக்கு இரண்டு முறை அறுவடை செய்யப்படுகிறது. இரண்டு மாதத்திற்கு முன் இப்பகுதியில் அறுவடை சீசன் துவங்-கியது. சித்திரை மாதம் முடியும் வரை அறுவடை சீசன் என்-பதால், பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் மிளகு அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுபோல், அறுவடை செய்-யப்படும் மிளகுகளை விவசாயிகள் நல்ல விலை கிடைக்கும் வரை வைத்திருப்பதற்காக தரம் பிரித்து காயவைத்து வருகின்-றனர்.
இதுகுறித்து, மிளகு பயிரிட்ட விவசாயி மாரீசன் கூறியதாவது:
கொல்லிமலை மிளகு நல்ல காரமுள்ளதாக இருக்கும். இதனால், இப்பகுதியில் மிளகு அறுவடை சீசன் என்றால், தமிழகம் மட்டு-மின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து வியாபாரிகள் வந்து வாங்கி செல்கின்றனர்.
கடந்த, இரண்டு மாதத்திற்கு முன் சீசன் துவங்கிய போது, ஒரு-கிலோ மிளகு, 350 ரூபாய்க்கு விற்ற நிலையில், அடுத்த மாதம் சீசன் முடிவதால், தற்போது, ஒருகிலோ, 750 ரூபாய்க்கு விற்-பனை செய்யப்படுகிறது. இதனால், 90 சதவீத விவசாயிகள் மிளகை சீசனில் விற்பனை செய்யாமல், நல்ல விலை வரும்-போது விற்பனை செய்வதற்காக வைத்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

