/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நாமக்கல்லில் லாரி திருட்டு பெரம்பலுார் வாலிபர் கைது
/
நாமக்கல்லில் லாரி திருட்டு பெரம்பலுார் வாலிபர் கைது
நாமக்கல்லில் லாரி திருட்டு பெரம்பலுார் வாலிபர் கைது
நாமக்கல்லில் லாரி திருட்டு பெரம்பலுார் வாலிபர் கைது
ADDED : நவ 23, 2025 01:05 AM
நாமக்கல், திருச்சி மாவட்டம், துறையூர் தாலுகா, விசுவாம்பாள் சமுத்திரத்தை சேர்ந்தவர் செந்தில்குமார், 45. இவர், சொந்தமாக லாரி வைத்து தொழில் செய்து வருகிறார். கடந்த, 12ல், நாமக்கல்-பரமத்தி சாலையில் உள்ள கணேஷ் என்பவருக்கு சொந்தமான பட்டறையில், பழுது பார்ப்பதற்காக லாரியை நிறுத்தியிருந்தார். தொடர்ந்து, போதிய இடவசதி இல்லாததால், பட்டறைக்கு அருகில் உள்ள காலி நிலத்தில் நிறுத்திவிட்டு சொந்த ஊருக்கு சென்றுவிட்டார்.
இந்நிலையில், கடந்த, 17ல், மீண்டும் வந்து பார்த்தபோது லாரியை காணவில்லை. இதுகுறித்து புகார்படி, நல்லிபாளையம் போலீசார், மர்ம நபரை தேடி வந்தனர். இதற்கிடையில், பெரம்பலுார் மாவட்டம், ஆலத்துார் தாலுகா, வரகூர்பட்டியை சேர்ந்த முத்துக்குமார், 26, என்ற வாலிபர், செந்தில்குமாருக்கு சொந்தமான லாரியை திருடி சென்றது தெரியவந்தது. லாரியை மீட்ட போலீசார், முத்துக்குமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

