/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ராசிபுரம் கிராம ஊராட்சியில் 100 நாள் வேலை கேட்டு மனு
/
ராசிபுரம் கிராம ஊராட்சியில் 100 நாள் வேலை கேட்டு மனு
ராசிபுரம் கிராம ஊராட்சியில் 100 நாள் வேலை கேட்டு மனு
ராசிபுரம் கிராம ஊராட்சியில் 100 நாள் வேலை கேட்டு மனு
ADDED : ஜூன் 06, 2025 01:19 AM
ராசிபுரம் ;ராசிபுரம் கிராம ஊராட்சியில், 100 நாள் வேலை கேட்டு பெண்கள் மனு கொடுத்தனர்.
ராசிபுரம் ஒன்றியம், முத்துக்காளிப்பட்டி ஊராட்சியை நகராட்சியுடன் இணைக்கக் கூடாது என்று பொதுமக்கள் தொடர்ந்து மனு கொடுத்து வருகின்றனர். கடந்த வாரம், கலெக்டர் அலுவலகத்திற்கு நேரில் சென்று மனு கொடுத்தனர். மேலும் ராசிபுரம் பி.டி.ஓ., அலுவலகத்திலும் மனு கொடுத்தனர். முத்துக்காளிப்பட்டி ஊராட்சியில், 100 நாள் வேலை திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று முத்துக்காளிப்பட்டி ஊராட்சியில் மீண்டும், 100 நாள் வேலை வாய்ப்பை வழங்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள், விவசாயிகள் மனு கொடுத்தனர். இதேபோல், பாதிக்கப்பட்ட வெண்ணந்துார் கட்டனாச்சினம்பட்டி ஊராட்சியில் மீண்டும், 100 நாள் வேலை வாய்ப்பு வழங்கி வருவதால், முத்துக்காளிப்பட்டி ஊராட்சியிலும் வேலை வழங்க வேண்டும் என பொதுமக்கள் கூறினர்.