/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தியாகிகளின் வாரிசு சான்றிதழ் வழங்க தாசில்தார்களுக்கு அறிவுறுத்த மனு
/
தியாகிகளின் வாரிசு சான்றிதழ் வழங்க தாசில்தார்களுக்கு அறிவுறுத்த மனு
தியாகிகளின் வாரிசு சான்றிதழ் வழங்க தாசில்தார்களுக்கு அறிவுறுத்த மனு
தியாகிகளின் வாரிசு சான்றிதழ் வழங்க தாசில்தார்களுக்கு அறிவுறுத்த மனு
ADDED : நவ 29, 2024 01:27 AM
தியாகிகளின் வாரிசு சான்றிதழ் வழங்க
தாசில்தார்களுக்கு அறிவுறுத்த மனு
நாமக்கல், நவ. 29-
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் வாரிசுகளுக்கு உடனடியாக தியாகிகளின் வாரிசு சான்றிதழ் வழங்க, தாசில்தார்களுக்கு, மாவட்ட கலெக்டர் அறிவுறுத்த வேண்டும் என, குறைதீர் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
நாமக்கல் மாவட்ட சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுதாரர்கள் பங்கேற்ற குறைதீர் கூட்டம் நேற்று கலெக்டர் உமா தலைமையில் நடந்தது. இதில், தியாகி காதர்மொய்தீன் மகன் ஷேக்நவீத் கலெக்டரிடம் அளித்த கோரிக்கை மனு விபரம்:
நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள அலுவலகம் முன், சுதந்திர போராட்ட தியாகிகள் பிரிவு என எழுத வேண்டும். ஒவ்வொரு மாதமும் சுதந்திர போராட்ட தியாகிகள் கூட்டம் நடைபெறுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.
தாசில்தார்கள் மூலம் தியாகிகள் வாரிசுகளை கண்டறிந்து, அவர்களுக்கான வாரிசு சான்றிதழ்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தியாகிகளின் வாரிசுகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளில், ஒதுக்கீடு அடிப்படையில் முன்னுரிமை வழங்க வேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

