/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நாமக்கல் நுகர்வோர் நீதிமன்றத்திற்கு புதிய பாதை கேட்டு நீதிபதியிடம் மனு
/
நாமக்கல் நுகர்வோர் நீதிமன்றத்திற்கு புதிய பாதை கேட்டு நீதிபதியிடம் மனு
நாமக்கல் நுகர்வோர் நீதிமன்றத்திற்கு புதிய பாதை கேட்டு நீதிபதியிடம் மனு
நாமக்கல் நுகர்வோர் நீதிமன்றத்திற்கு புதிய பாதை கேட்டு நீதிபதியிடம் மனு
ADDED : ஆக 28, 2024 12:51 PM
நாமக்கல் : 'நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்திற்கு, புதிய பாதை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி ராமராஜ், சென்னை உயர்நீதிமன்ற (பொ) தலைமை நீதிபதி கிருஷ்ணகுமாரிடம் மனு அளித்தார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது: நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில், 18 மாதங்களில், 500 வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டு, தற்போது, 2023ல் தாக்கல் செய்யப்பட்ட நுகர்வோர் வழக்குகள் மட்டுமே நிலுவையில் உள்ளன. அதிக காலம் நிலுவையில் இருந்த வழக்குகள், கோவையில் இருந்து நாமக்கல்லுக்கு மாற்றம் செய்யப்பட்டு, 143 வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஒரே ஆண்டில், 36 வழக்குகளை சமரசம் மூலம் தீர்த்து வைத்து, இந்தியாவிலேயே மாவட்ட அளவில் உள்ள நுகர்வோர் நீதிமன்றங்களில், 2023ல், அதிக வழக்குகளை சமரசம் மூலம் தீர்த்து வைத்த நீதிமன்றமாக, நாமக்கல் நுகர்வோர் நீதிமன்றம் சாதனை படைத்துள்ளது.
ஆனால், நாமக்கல் - திருச்செங்கோடு சாலையில் இருந்து, மாவட்ட நீதிமன்ற வளாகத்துக்குள் சென்று நேரடியாக, நுகர்வோர் நீதிமன்றத்திற்கு செல்ல நுழைவாயில் இல்லை. இதனால், பொதுமக்களும், வக்கீல்களும் மருத்துவ கல்லுாரி செல்லும் சாலை வழியாக நுகர்வோர் நீதிமன்றத்திற்கு சுற்றி வந்து செல்கின்றனர். மாவட்ட நீதிமன்ற வளாகம் பின்புறம் உள்ள நுழைவாயிலை மாற்றி, நுகர்வோர் நீதிமன்றத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய நுழைவாயிலுக்கு நேர் எதிரில் அமைத்தால், நேரடியாக நுகர்வோர் நீதிமன்றத்திற்கு செல்ல வாய்ப்பாக அமையும். மேலும், நெடுஞ்சாலையில் இருந்து மாவட்ட நீதிமன்றம் வழியாக நுகர்வோர் நீதிமன்றத்துக்கு வந்து செல்ல மாவட்ட நீதிமன்றம் பின்பக்க சுற்றுச்சுவரில் உள்ள நுழைவாயிலை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.