/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சொந்த பயன்பாட்டு வாகனங்களை வாடகைக்கு இயக்குவதை தடுக்க மனு
/
சொந்த பயன்பாட்டு வாகனங்களை வாடகைக்கு இயக்குவதை தடுக்க மனு
சொந்த பயன்பாட்டு வாகனங்களை வாடகைக்கு இயக்குவதை தடுக்க மனு
சொந்த பயன்பாட்டு வாகனங்களை வாடகைக்கு இயக்குவதை தடுக்க மனு
ADDED : ஏப் 29, 2025 02:13 AM
நாமக்கல்:
அகில இந்திய மோட்டார் வாகன மக்கள் கட்சியினர், நாமக்கல் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது: சொந்த பயன்பாட்டுக்கு வாங்கிய வாகனங்களை, கள்ளத்தனமாக வணிக ரீதியில் வாடகைக்கு இயக்கி வருகின்றனர். மேலும், அண்டை மாநில பதிவு எண் கொண்ட கார்களை வாங்கி, நம் மாநிலத்தில் பெயர் மாற்றம் செய்யாமல் வாடகைக்கு இயக்கி வருகின்றனர். அதனால், அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு, பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. இதுகுறித்து புகாரளித்தால், கண் துடைப்புக்காக மட்டுமே, ஒரு சில வாகனங்களை தணிக்கை செய்து அபராதம் விதிக்கின்றனர். அரசுக்கு வரி வருவாய் இழப்பும், முறையாக வரி
செலுத்தாமல் தொழில் செய்து அனைவரின் வாழ்வாதாரத்தையும் அழிக்கும், இதுபோன்ற வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மோட்டார் வாகன சட்டத்தை மீறி, முகப்பு விளக்குகளை அதிக எண்ணிக்கையில் பொருத்தி, இரவில் இயக்கி வருகின்றனர். அதிலும், வெள்ளை நிறத்தில் அதிக வெளிச்சம் உமிழும் 'எல்.இ.டி.,' விளக்குகள் பயன்படுத்துகின்றனர். அதனால், எதிரில் என்ன இருக்கிறது என்பது டிரைவர் உணர முடியாமல் இரவில், அதிக விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. அதன் காரணமாக உயிரிழப்புகளும், உடல் உறுப்புகளை இழப்பதும் அதிக அளவில் நடக்கிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

