/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சாலை வசதி கேட்டு கலெக்டரிடம் மனு
/
சாலை வசதி கேட்டு கலெக்டரிடம் மனு
ADDED : ஜூலை 22, 2025 01:50 AM
நாமக்கல், பருத்திமுடி, ஊர்புரம்பட்டி கிராமத்தை சேர்ந்த மலைவாழ் மக்கள், சாலை வசதி கேட்டு, நாமக்கல் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது: கொல்லிமலை தாலுகா, அரியூர்நாடு பஞ்.,க்கு உட்பட்ட பருத்திமுடி, ஊர்புரம்பட்டி கிராமத்தில், 30 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்கள் கிராமத்திற்கு சாலைவசதி இல்லாமல் இருந்தது. இதை தொடர்ந்து, 2001ல், தனிநபர்களிடம் இருந்து சாலைக்கான நிலத்தை எழுதி வாங்கி விட்டோம். இந்த சாலையில்தான் அனைவரும் சென்று வருகிறோம்.
தற்போது, மேற்படி நபர்கள் எங்களுக்கு சாலைக்காக எழுதி கொடுத்த நிலத்தில், வாகனங்கள் செல்லக்கூடாது என தடுத்து வருகின்றனர். பல்வேறு தரப்பினரின் நலனை கருத்தில் கொண்டு, உரிய நடவடிக்கை எடுத்து, சாலைவசதி ஏற்படுத்தி தர வேண்டும்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.