/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மகளிர் உரிமைத்தொகை பெற குவியும் மனுக்கள்
/
மகளிர் உரிமைத்தொகை பெற குவியும் மனுக்கள்
ADDED : ஜூலை 26, 2025 01:08 AM
ராசிபுரம், ராசிபுரம் ரயில்வே ஸ்டேஷன் அருகே, தனியார் மண்டபத்தில், 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் நடந்தது. இதில், நேற்று ஒரே நாளில், 400க்கும் மேற்பட்ட பெண்கள், மகளிர் உரிமைத்தொகைக்கு பதிவு செய்திருந்தனர். அதேபோல், பட்டா பெயர் மாறுதல், வீட்டு வரி, குடிநீர் வரி பெயர் மாற்றம் செய்ய அதிகமானோர் மனு கொடுத்திருந்தனர். 100க்கும் மேற்பட்டோர் பட்டா பெயர் மாறுதல் கேட்டு விண்ணப்பித்திருந்தனர்.
பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் விழா, நேற்று மாலை நடந்தது. எம்.பி., ராஜேஸ்குமார், பயனாளிகளுக்கு பட்டா பெயர் மாற்ற ஆணையை வழங்கினார். நகராட்சி சேர்மன் கவிதா, தாசில்தார் சசிகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். உரிமைத்தொகை பதிவு செய்யும் பகுதிக்கு சென்ற எம்.பி., ராஜேஸ்குமார், விண்ணப்பங்களை முகாம் முடிவதற்குள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார்.