/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பெட்ரோல் குண்டு வீச்சு: மர்ம நபர்களுக்கு வலை
/
பெட்ரோல் குண்டு வீச்சு: மர்ம நபர்களுக்கு வலை
ADDED : ஜன 13, 2025 02:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குமாரபாளையம்: குமாரபாளையம், தட்டான்குட்டை பஞ்., சத்யா நகர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ், 42; கட்டட தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு, 11:00 மணியளவில், வீட்டிற்கு வெளியே வெடி சத்தம் கேட்டுள்ளது.
கோவிந்தராஜ் வெளியே வந்து பார்த்துள்ளார். அப்போது, கேட்டின் அருகே தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. அருகே பாட்டில் துகள்கள் சிதறி கிடந்தன. இதுகுறித்து கோவிந்தராஜ் அளித்த புகார்படி, குமாரபாளையம் போலீசார், பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.