/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ரெங்கேஸ்வரர் கல்வி நிறுவனங்களில் பிஸியோ சிகிச்சை மையம் துவக்கம்
/
ரெங்கேஸ்வரர் கல்வி நிறுவனங்களில் பிஸியோ சிகிச்சை மையம் துவக்கம்
ரெங்கேஸ்வரர் கல்வி நிறுவனங்களில் பிஸியோ சிகிச்சை மையம் துவக்கம்
ரெங்கேஸ்வரர் கல்வி நிறுவனங்களில் பிஸியோ சிகிச்சை மையம் துவக்கம்
ADDED : ஆக 24, 2025 12:43 AM
நாமக்கல், :நாமக்கல், பொட்டிரெட்டிப்பட்டியில் ஸ்ரீரெங்கேஸ்வரர் கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ளன. அதன் அங்கமான, ஸ்ரீரெங்கேஸ்வரர் நர்சிங் கல்லுாரியின், மூன்றாவது குழு வகுப்பு மற்றும் பிஸியோ சிகிச்சை மையம் துவக்க விழா நடந்தது. கல்வி நிறுவனங்களின் தலைவர் வக்கீல் சரவணன் தலைமை வகித்தார். செயல் இயக்குனர் சுப்ரமணி வரவேற்றார். செயலாளர் வேலுச்சாமி, பொருளாளர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னாள் எம்.எல்.ஏ.,வும், பாண்டமங்கலம் விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் தலைவருமான நெடுஞ்செழியன், நாமக்கல் ஆர்.டி., நியுரோ மைன்ட் சென்டரின் மூளை மற்றும் நரம்பியல் சார்ந்த ஆலோசகர் ராஜா, நாமக்கல் நவலடி பிரைய்ன் ஸ்பைன் கேர் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் பொன்னையன் ஆகியோர் பங்கேற்றனர்.
கல்லுாரி வளாகத்தில், புதிதாக திறக்கப்பட்டுள்ள பிசியோ சிகிச்சை மையம், ஆரோக்கியமான உணவு மற்றும் விசாலமான குளிரூட்டப்பட்ட, 10 படுக்கை வசதிகளுடன் தங்கி சிகிச்சை பெறும் வகையில், நவீன பிசியோ சிகிச்சை உபகரணங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது என, முதுநிலை பிசியோ சிகிச்சை நிபுணர் ஆனந்தி விளக்கினார். நர்சிங் கல்லுாரி முதல்வர் நற்றமிழ், கல்வி அறக்கட்டளை அறங்காவலர்கள், கல்லுாரி முதல்வர், ஆசிரியர்கள், நிர்வாக அலுவலர் மகேஸ்வரி உள்பட பலர் பங்கேற்றனர்.