/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கோரிக்கையை வலியுறுத்தி மறியல் போராட்டம்: 490 பெண்கள் உள்பட 610 பேர் கைது
/
கோரிக்கையை வலியுறுத்தி மறியல் போராட்டம்: 490 பெண்கள் உள்பட 610 பேர் கைது
கோரிக்கையை வலியுறுத்தி மறியல் போராட்டம்: 490 பெண்கள் உள்பட 610 பேர் கைது
கோரிக்கையை வலியுறுத்தி மறியல் போராட்டம்: 490 பெண்கள் உள்பட 610 பேர் கைது
ADDED : பிப் 17, 2024 12:51 PM
நாமக்கல்: பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி, நாமக்கல்லில் நடந்த மறியல் போராட்டத்தில், 490 பெண்கள் உள்பட, 610 பேர் கைது செய்யப்பட்டனர்.
மத்திய தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில், பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி, பொது வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம், நாமக்கல்லில் நடந்தது. ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட தலைவர் தனசேகரன் தலைமை வகித்தார். சி.ஐ.டி.யு, மாவட்ட செயலாளர் வேலுசாமி, மாவட்ட துணைத்தலைவர் ஜெயக்கொடி, வாரிய உறுப்பினர் தமிழ்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணைத்தலைவர் டெய்சி பேசினார்.
இதில், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். பொதுத்துறை நிறுவனங்கள், வங்கி, ரயில்வே, எல்.ஐ.சி., தனியாருக்கு வழங்கக் கூடாது. மின்வாரியத்தை, உற்பத்தி, பகிர்மானம், வசூல் என, 3 பகுதிகளாக பிரிக்கும் மின்சார மசோதாவை கைவிட வேண்டும். 'ஸ்மார்ட் மீட்டர்' பொருத்துவதை கைவிட வேண்டும்.
அரசுத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பி குறைந்தபட்சம், 20,000 ரூபாய் ஊதியம் வழங்க வேண்டும். விவசாயம் சார்ந்த தொழில்களை பாதுகாத்து வங்கி கடன் வழங்க வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். உணவு பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும். அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். தேசிய கல்விக்கொள்கை என்ற பெயரில், முன்பருவக்கல்வி பயிலும் குழந்தைகளின் நலனுக்கு எதிராக செயல்படும் போக்கை கைவிட வேண்டும்
என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி, நாமக்கல் பஸ் ஸ்டாண்ட் அருகே, சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை, நாமக்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரபாண்டியன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.அதன்படி, 490 பெண்கள், 120 ஆண்கள் என, மொத்தம், 610 பேர் கைது செய்யப்பட்டு, நாமக்கல்லில் உள்ள தனியார் மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டனர். தொடர்ந்து மாலையில், அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
இதேபோல், குமாரபாளையத்தில் விசைத்தறி, விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில், மத்திய அரசின் தொழிலாளர் நல சட்ட திருத்தத்தை வாபஸ் பெற வேண்டும். விவசாயிகளின் கோரிக்கையை அமல்படுத்த வேண்டும். குறைந்தபட்ச ஆதார விலை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.
அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையை கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட, 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கனரா வங்கி முன் மறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்தில் ஈடுபட்ட, 42 பெண்கள் உள்பட, 117 பேரை போலீசார் கைது செய்தனர்.