/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில் கம்பம் நடும் விழா
/
நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில் கம்பம் நடும் விழா
நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில் கம்பம் நடும் விழா
நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில் கம்பம் நடும் விழா
ADDED : அக் 25, 2025 01:35 AM
ராசிபுரம், ராசிபுரம் - நாமக்கல் சாலையில் நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசியில், தேர் திருவிழா நடப்பது வழக்கம். இந்தாண்டு விழா, கடந்த செவ்வாய்கிழமை இரவு அம்மனுக்கு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. கடந்த, 16ல் விழா பந்தல் போட முகூர்த்தகால் நடப்பட்டது. நேற்று முன்தினம் இரவு, கம்பம் நடும் விழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
நவ., 4ல் பூவோடு எடுக்கும் நிகழ்ச்சிக்கு, கொடியேற்றம் நடக்கவுள்ளது. நவ., 5ல் பொங்கல் வைபவம், 6ல் தீமிதி விழா, மாலை தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி, 8ல் சத்தாபரணம் நிகழ்ச்சி நடக்கிறது. நவ., 8 வரை மண்டகப்படி கட்டளையும், 10 முதல், 23 வரை விடையாற்றி கட்டளையும் நடக்கவுள்ளது. இந்த கட்டளை நிகழ்ச்சிகளின் போது, அம்மன் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். முன்னதாக முதல் நாள் மண்டகப்படி நிகழ்ச்சியில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

