ADDED : செப் 20, 2026 06:41 AM
அ நிறம் | அளவு
ராசிபுரம்:ராசிபுரம்
கடைவீதி பகுதியில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் வாகனங்கள்
மூலம் கொண்டு வரப்பட்டு, கடைகளுக்கு விநியோகம் செய்யப்படுவதாக
நகராட்சி நிர்வாகத்திற்கு தகவல் கிடைத்தது. நகராட்சி சுகாதார பிரிவு
அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் கடைவீதி பகுதியில் சோதனையில்
ஈடுபட்டனர்.
அப்போது, அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி
அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில், வணிக பயன்பாட்டிற்காக
கடைகளுக்கு கொண்டு செல்ல பதுக்கி வைக்கப்பட்டிருந்த, ரூபாய், 5,000
மதிப்புள்ள தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கப்புகள் இருப்பது
கண்டுபிடிக்கப்பட்டது. அதை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும்,
தடை செய்யப்பட்ட பொருட்களை ஏற்றி வந்த வாகனத்திற்கு, 1,000 ரூபாய்
அபராதம் விதித்து வசூலித்தனர்.
