/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பிளாஸ்டிக் பயன்பாடு: அதிகாரிகள் சோதனை
/
பிளாஸ்டிக் பயன்பாடு: அதிகாரிகள் சோதனை
ADDED : ஆக 23, 2025 01:33 AM
பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம் அருகே, களியனுார் பஞ்.,க்குட்பட்ட ஆவத்திபாளையம், களியனுார், சில்லாங்காடு உள்ளிட்ட பகுதிகளில் பேக்கரி, டீ, மளிகை, இறைச்சி கடைகள் ஏராளமானவை செயல்பட்டு வருகின்றன. இதில், பெரும்பாலான கடைகளில் பிளாஸ்டிக் கவர் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனால் பயன்படுத்திவிட்டு துாக்கி எறியும் பிளாஸ்டிக் கவர்கள், வடிகால் மற்றும் திறந்தவெளியில் குவிந்து கிடக்கின்றன. மேலும், வடிகாலில் பல இடங்களில் பிளாஸ்டிக் கவரால் சாக்கடை அடைப்பும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வி, பஞ்., செயலாளர் பாக்கியராஜ் ஆகியோர் கடைகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, இரண்டு கடைகளுக்கு, தலா, 500 ரூபாய் அபராதம் விதித்தனர். மேலும், தடையை மீறி பிளாஸ்டிக் கவர்களை பயன்படுத்தினாலோ, விற்பனை செய்தாலோ சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என, கடை உரிமையாளர்களை எச்சரித்தனர்.