/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பிளஸ் 1, பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வு குலுக்கல் முறையில் பணியிடம் ஒதுக்கீடு

ADDED : பிப் 23, 2024 01:33 AM
நாமக்கல்;பிளஸ் 1, பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வுக்காக, நாமக்கல் மாவட்டத்தில், 1,286 முதன்மை மற்றும் அறை கண்காணிப்பாளர்களுக்கு குலுக்கல் முறையில் பணியிடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
நாமக்கல் மாவட்டத்தில், 197 அரசு, தனியார் பள்ளிகளைச் சேர்ந்த, 8,479 மாணவர்கள், 8,932 மாணவியர் என, மொத்தம், 17,411 பேர், பிளஸ் 2 பொதுத்தேர்வை, 86 மையங்களில் எழுதுகின்றனர். அதேபோல், பிளஸ் 1 பொதுத்தேர்வை, 197 பள்ளிகளை சேர்ந்த, 9,151 மாணவர்கள், 9,304 மாணவியர் என, மொத்தம், 18,455 பேர், 86 மையங்களில் எழுதுகின்றனர். இதில், பணியாற்ற உள்ள, 86 முதன்மை கண்காணிப்பாளர்களுக்கும், 1,200 அறை கண்காணிப்பாளர்களுக்கும் குலுக்கல் முறையில் பணியிடம் ஒதுக்கீடு செய்து, அதற்கான நியனம கடிதத்தை, நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கலையரங்கில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி வழங்கினார்.