/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
இன்று பிளஸ் 1 பொதுத்தேர்வு; தேர்வெழுத 18,966 பேர் தயார்
/
இன்று பிளஸ் 1 பொதுத்தேர்வு; தேர்வெழுத 18,966 பேர் தயார்
இன்று பிளஸ் 1 பொதுத்தேர்வு; தேர்வெழுத 18,966 பேர் தயார்
இன்று பிளஸ் 1 பொதுத்தேர்வு; தேர்வெழுத 18,966 பேர் தயார்
ADDED : மார் 05, 2025 06:24 AM
நாமக்கல்: தமிழகம் முழுவதும், பிளஸ் -2 பொதுத்தேர்வு, நேற்று முன்தினம் தொடங்கியது. அதேபோல், பிளஸ் -1 பொதுத்தேர்வு இன்று துவங்குகிறது.
நாமக்கல் மாவட்டத்தில், பிளஸ்- 1 தேர்வை, 9,372 மாணவர்கள், 9,594 மாணவியர் என மொத்தம், 18,966 பேர் எழுதுகின்றனர். அதில், மாற்றுத்திறனாளி மாணவர்கள், 223 பேர் அடங்குவர். அவர்களில், 168 பேருக்கு, சொல்வதை எழுதுபவர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இதற்காக, 86 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு பணியில், 86 முதன்மை கண்காணிப்பாளர்கள், 86 துறை அலுவலர்கள், நான்கு கூடுதல் துறை அலுவலர்கள், 200 பறக்கும் படை உறுப்பினர்கள், வழித்தட அலுவலர்கள், 24 பேர், மூன்று வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள் மற்றும் அறை கண்காணிப்பாளர்கள், 1,260 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.