/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பிளஸ் 2 விடைத்தாள் திருத்தம் 17ல் நிறைவு
/
பிளஸ் 2 விடைத்தாள் திருத்தம் 17ல் நிறைவு
ADDED : ஏப் 13, 2025 04:10 AM
நாமக்கல்: தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, கடந்த, 28ல் துவங்கி, வரும், 15ல் முடிகிறது.
நாமக்கல் மாவட்டத்தில், அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகள் என, மொத்தம், 275 பள்ளிகளை சேர்ந்த, 19,038 மாணவ, மாணவியர் தேர்வு எழுதுகின்றனர்.இதற்காக, மாவட்டத்தில், 92 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்துவதற்காக, திருச்-செங்கோடு கே.எஸ்.ஆர்., மெட்ரிக் பள்ளி, ராசிபுரம் அண்ணா-சலை அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய இரண்டு இடங்களில், விடைத்தாள் திருத்தும் மையம் மற்றும் விடைத்தாள் சேகரிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை முடிந்துள்ள பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்கள், இந்த மையங்களுக்கு கொண்டு சென்று இருப்புவைக்கப்பட்டுள்ளது.
இங்கிருந்து, வேறு மாவட்டங்களில் உள்ள வடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். திருச்செங்-கோடு விடைத்தாள் திருத்தும் மையத்திற்கு, முகாம் அலுவலராக, அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் குமரேசன், ராசிபுரம் விடைத்தாள் திருத்தும் மையத்திற்கு, முகாம் அலுவலராக மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் பச்சமுத்து ஆகியோர் நிய-மிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து, மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:
நாமக்கல் மாவட்டத்தில், தற்போது மூன்று மையங்களில், பிளஸ் 2 விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டுள்-ளது. அதில், 1,400 முதுகலை ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர். வரும், 17ல் பிளஸ் 2 விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து, அதே மையங்களில், பிளஸ் 1 விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யும் பணி மேற்கொள்ளப்படும். தற்போது நடந்து வரும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாளை மதிப்பீடு செய்வதற்கு, இரண்டு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தேர்வுகள் முடிவடைந்த, ஒரு வாரத்திற்குள் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கும். இதற்கான அட்டவணையை தேர்-வுத்துறை விரைவில் வெளியிடும். விடைத்தாள் திருத்தும் மையங்களில் தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்-ளன.
இவ்வாறு அவர்கள் கூறினர்