/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பிளஸ் 2 செய்முறை தேர்வு துவக்கம்: மாவட்டத்தில் 12,922 பேர் பங்கேற்பு
/
பிளஸ் 2 செய்முறை தேர்வு துவக்கம்: மாவட்டத்தில் 12,922 பேர் பங்கேற்பு
பிளஸ் 2 செய்முறை தேர்வு துவக்கம்: மாவட்டத்தில் 12,922 பேர் பங்கேற்பு
பிளஸ் 2 செய்முறை தேர்வு துவக்கம்: மாவட்டத்தில் 12,922 பேர் பங்கேற்பு
ADDED : பிப் 13, 2024 12:16 PM
நாமக்கல்: மாநிலம் முழுதும் பிளஸ் 2 செய்முறை தேர்வு, நேற்று துவங்கியது. நாமக்கல் மாவட்டத்தில், 12,922 மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
தமிழக அரசு பாடத்திட்டத்தில் படிக்கும் பிளஸ் -2 மாணவ, மாணவியருக்கு, வரும் மார்ச், 1ல் பொதுத்தேர்வு துவங்கி, 22ல் முடிகிறது. நாமக்கல் மாவட்டத்தில், 146 மையங்களில், பிளஸ் 2 மாணவர்களுக்கு, செய்முறை தேர்வு துவங்கியது.
தமிழகத்தில் நடப்பாண்டிற்கான பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வுகள், மார்ச் முதல் ஏப்ரல் மாதத்திற்குள் நடத்தி முடிக்க, பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, பிளஸ் 2 தேர்வு, வரும் மார்ச், 1ல் துவங்கி, 22 வரையும்; பிளஸ் 1 தேர்வு, மார்ச், 4ல் துவங்கி, 25 வரையும்; பத்தாம் வகுப்பு தேர்வு, மார்ச், 26ல் துவங்கி, ஏப்., 6 வரையும் நடக்கிறது. தேர்வுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்நிலையில், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கான செய்முறை தேர்வு, நேற்று துவங்கி, வரும், 24 வரை நடக்கிறது. தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும், நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் சார்பில் நடந்து வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில், அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் என, மொத்தம், 197 பள்ளிகளை சேர்ந்த, பிளஸ் 2 மாணவ, மாணவியர், பொதுத்தேர்வில் பங்கேற்கின்றனர். அதில், 146 மையங்களில், நேற்று முதல் செய்முறை தேர்வு துவங்கியது. அவற்றில், 12,922 மாணவ, மாணவியர் செய்முறை தேர்வை எதிர்கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.