ADDED : ஜன 03, 2025 01:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பா.ம.க., ஆர்ப்பாட்டம்
ராசிபுரம், ஜன.3-
தடையை மீறி போராட்டம் நடத்திய பசுமை தாயக அமைப்பின் தலைர் சவுமியாவை போலீசார் கைது செய்தனர். இதை கண்டித்து ராசிபுரத்தில், பா.ம.க., வினர் நேற்று மதியம் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ராசிபுரம் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில செயற்குழு உறுப்பினர் மோகன்ராஜ், மாவட்ட செயலாளர் பொன்னுசாமி, மாநில இளைஞரணி செயலாளர் வடிவேலன், பாலு உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தி.மு.க., அரசை கண்டித்து கோஷமிட்டனர். போலீசார் பா.ம.க., நிர்வாகிகளை கைது செய்து, மாலையில் விடுவித்தனர்.