/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நாமக்கல், கரூர் மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை தடுக்கணும்: பா.ம.க., இளைஞர் சங்கம் தீர்மானம்
/
நாமக்கல், கரூர் மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை தடுக்கணும்: பா.ம.க., இளைஞர் சங்கம் தீர்மானம்
நாமக்கல், கரூர் மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை தடுக்கணும்: பா.ம.க., இளைஞர் சங்கம் தீர்மானம்
நாமக்கல், கரூர் மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை தடுக்கணும்: பா.ம.க., இளைஞர் சங்கம் தீர்மானம்
ADDED : நவ 08, 2025 04:34 AM
நாமக்கல்: 'நாமக்கல், கரூரில் கஞ்சா விற்பனையை போலீசார் தடுக்க வேண்டும்' என, பா.ம.க., இளைஞர் சங்க பொதுக்குழுவில் தீர்-மானம் நிறைவேற்றப்பட்டது.
நாமக்கல், கரூர் மாவட்ட, பா.ம.க., இளைஞர் சங்க பொதுக்-குழு கூட்டம், நேற்று நாமக்கல்லில் நடந்தது. மாநில இளைஞ-ரணி செயலாளர் வடிவேல் தலைமை வகித்தார். கூட்டத்தில், பாக்கு கொட்டை பதப்படுத்தும் தொழிலாளர் மீது, குண்டர்களை ஏவி தாக்குதல் நடத்திய, சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ., அருள் மற்றும் அவரது உதவியாளர்கள் மீது சட்டப்படி நடவ-டிக்கை எடுக்க வேண்டும். நாமக்கல், 'சிப்காட்' தொழிற்பேட்டை திட்டத்திற்கு, நிலம் எடுப்பது தொடர்பாக, 150 போராட்டங்கள், 500க்கும் மேற்பட்ட நாட்கள் காத்திருப்பு போராட்டங்கள் நடத்-தியும், இதுவரை, 953 ஏக்கர் விலை நிலம் அபகரிக்கப்பட்டு, விவசாயிகளுக்கு துரோகம் விளைவிக்கும் தமிழக அரசுக்கு கண்-டனம் தெரிவிக்கப்படுகிறது.நாமக்கல், கரூர் மாவட்டங்களில் நடந்து வரும் ஏகபோக கஞ்சா விற்பனையை போலீசார் தடுக்க வேண்டும். நாமக்கல், கரூர் மாவட்டங்களில், 24 மணி நேரமும் நடந்து வரும் சட்டவிரோத மது, குட்கா விற்பனையை காவல் துறை தடுக்க வேண்டும். பெண்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, நாமக்கல்-திருச்சி சாலையில் அமைந்துள்ள அரசு மகளிர் கலை கல்லுாரி எதிரில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்-றப்பட்டன.
கிழக்கு மாவட்ட செயலாளர் கோவிந்தன், மாவட்ட இளைஞ-ரணி செயலாளர் மனோஜ், மாநில மாணவரணி செயலாளர் பிரேம்-பாலு, உழவர் பேரியக்க துணை செயலாளர் பொன் ரமேஷ், மாநில இளைஞரணி தலைவர் கணேஷ்குமார் ஆகியோர் பங்கேற்-றனர்.

