/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மாணவியுடன் பழக்கம் மாணவருக்கு 'போக்சோ'
/
மாணவியுடன் பழக்கம் மாணவருக்கு 'போக்சோ'
ADDED : மே 21, 2025 02:17 AM
புதுச்சத்திரம் :தர்மபுரி மாவட்டம், சோழப்பாடி பஞ்., பேடரஹள்ளி கிராமத்தை சேர்ந்த சிவக்குமார், 20; கோவையில் உள்ள தனியார் கல்லுாரியில், இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கு, புதுச்சத்திரம் அருகே, நவணி பள்ளிப்பட்டியை சேர்ந்த மாணவியுடன், 'இன்ஸ்டா' மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. திருமணம் செய்து கொள்வதாக சிவக்குமார் ஆசைவார்த்தை கூறியுள்ளார்.
இதை நம்பிய மாணவி, கடந்த, 16ல் புதுச்சத்திரம் வந்த சிவக்குமாருடன், வெளியில் சுற்றி வந்தார். பின், நேற்று முன்தினம், 19ல் மீண்டும் புதுச்சத்திரம் கொண்டு வந்து சிவக்குமார் விட்டு சென்றுள்ளார்.
இதுகுறித்து மாணிவியின் தாய், புதுச்சத்திரம் போலீசில் அளித்த புகார்படி, சிவக்குமார் மீது போலீசார் போக்சோ வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.