ADDED : ஜூலை 27, 2025 01:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போச்சம்பள்ளி, :கிருஷ்ணகிரி மாவட்டம், மத்துார் அருகே குண்டூரை சேர்ந்தவர் பிளஸ் 2 படித்து வரும், 17 வயது மாணவி. பெற்றோரை இழந்த நிலையில், தன் தாத்தா, பாட்டி வீட்டில் தங்கி, மத்துார் அரசு பெண்கள் பள்ளியில் படித்து வருகிறார்.
இவரிடம், துாரத்து உறவு முறையில், 70 வயது தாத்தா, 50 வயது பெரியப்பா ஆகியோர் பாலியல் சீண்டலில் அடிக்கடி ஈடுபட்டு வந்துள்ளனர். இதுகுறித்து மாணவியின் பாட்டி புகார்படி, அவர்கள் இருவர் மீதும், மத்துார் போலீசார் போக்சோவில் வழக்கு பதிந்து, தலைமறைவான அவர்களை தேடி வருகின்றனர்.