/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
குடியிருப்பு பகுதியை கண்காணிக்கமுடியாமல் தவிக்கும் போலீசார்
/
குடியிருப்பு பகுதியை கண்காணிக்கமுடியாமல் தவிக்கும் போலீசார்
குடியிருப்பு பகுதியை கண்காணிக்கமுடியாமல் தவிக்கும் போலீசார்
குடியிருப்பு பகுதியை கண்காணிக்கமுடியாமல் தவிக்கும் போலீசார்
ADDED : ஏப் 23, 2025 01:50 AM
பள்ளிப்பாளையம்,:பள்ளிப்பாளையம் சுற்று வட்டாரத்தில், இரவில் அதிகரித்து வரும் குற்றங்கள், மர்ம நபர்கள் நடமாட்டத்தை போலீசாரால் கண்காணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
பள்ளிப்பாளையம் அருகே, அக்ரஹாரம், தில்லை நகர், அலமேடு, தாஜ்நகர், ஸ்ரீ கார்டன், காவிரி, ஆவாரங்காடு உள்ளிட்ட பல பகுதிகளில் நள்ளிரவு நேரத்தில், மர்ம நபர்கள் கடந்த ஒரு மாதமாக உலா வருகின்றனர். இவர்கள் ஒவ்வொரு வீடாக நோட்டமிட்டு, கைக்கு கிடைத்ததை திருடி செல்கின்றனர். இரவில் உலா வரும் மர்ம நபர்களுக்கு வயது, 18 முதல் 25 வரை இருக்கும்.
கடந்த, 12ம் தேதி அலமேடு பகுதியில் மர்ம நபர் வீட்டின் சுவர் ஏறி குதித்து பொருட்களை திருடி சென்றுள்ளார். நேற்று முன்தினம் இரவு, தில்லைநகர் பகுதியில் உள்ள வீட்டில் மர்ம நபர் ஒருவர் சுவர் ஏறி குதித்துள்ளார். ஸ்ரீ கார்டன் பகுதியில் உள்ள ஒரு வீட்டை மூன்று மர்ம நபர்கள் நோட்டமிட்டுள்ளனர். இது போல, இரவில் பல இடங்களில் மர்ம நபர்களின் நடமாட்டம் காணப்படுகிறது. இரவில் போலீசாரின் ரோந்து குறைந்துள்ளதால், மர்ம நபர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
எனவே, தொடர்ந்து இரவில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட, மாவட்ட எஸ்.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.