/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
200க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளை பாதுகாப்புடன் கரைக்க போலீசார் ஏற்பாடு
/
200க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளை பாதுகாப்புடன் கரைக்க போலீசார் ஏற்பாடு
200க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளை பாதுகாப்புடன் கரைக்க போலீசார் ஏற்பாடு
200க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளை பாதுகாப்புடன் கரைக்க போலீசார் ஏற்பாடு
ADDED : ஆக 29, 2025 01:21 AM
ராசிபுரம்,  ராசிபுரம் சரகத்தில் வைக்கப்பட்டுள்ள, 200க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளை பாதுகாப்புடன் கொண்டு சென்று கரைக்க, போலீசார் ஏற்பாடு செய்து வருகின்றனர்.
கடந்த, 27ம் தேதி  விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. வீடு, கோவில்களில் உள்ள விநாயகர் சிலைக்கு சிறப்பு அபி ேஷகம் ஆராதனைகள் நடத்தப்பட்டன. அதுமட்டுமின்றி பொதுமக்கள் சார்பில், வீதிகளில் சுவாமி சிலைகள் வைக்கப்பட்டு பூஜை நடத்தி வருகின்றனர். இந்த சிலைகளை மூன்றாம் நாளான இன்று, நீர் நிலைகளில் கரைக்க ஏற்பாடு செய்து வருகின்றனர். 90 சதவீத சிலைகள் மோகனுார் காவிரி ஆற்றில் கரைக்க திட்டமிட்டுள்ளனர். அதுமட்டுமின்றி அக்கரைப்பட்டி ஏரி, ஜேடர்பாளையம் பரிசல்துறை, வெங்கரை ஆகிய இடங்களிலும் கரைக்கவுள்ளனர்.
ராசிபுரம் பகுதியில், 60, நாமகிரிப்பேட்டை, 70, வெண்ணந்துார், 35, பேளுக்குறிச்சி, 20, ஆயில்பட்டி, 10 மற்றும் கோவில், வீடுகளுக்குள் அனுமதி பெறாமல் வைக்கப்பட்ட சிலைகள் என மொத்தம், 200க்கும் மேற்பட்ட சிலைகளை இன்று கரைக்க உள்ளனர். நாமகிரிப்பேட்டை, ஆயில்பட்டி, மங்களபுரம், மெட்டாலா பகுதியில் வைக்கப்பட்டுள்ள சிலைகள் நாமகிரிப்பேட்டையில் இருந்து அரியாகவுண்டம்பட்டி வழியாக பேளுக்குறிச்சி சென்றடைகிறது. அதேபோல், ராசிபுரம் பகுதியில் வைக்கப்பட்டுள்ள சிலைகள் கேனோரிப்பட்டி, சிங்களாந்தபுரம் வழியாக பேளுக்குறிச்சி செல்கிறது.
அங்கிருந்து அனைத்து சிலைகளும் மோகனுார் ஆற்றுக்கு அனுப்பப்படுகிறது. அதேபோல், வெண்ணந்துார் பகுதியில் இருந்து வரும் சிலைகள் தேசிய நெடுஞ்சாலை வழியாக அனுப்பப்படுகிறது. ஒவ்வொரு முக்கிய சந்திப்பிலும், சிலைகளை  பாதுகாப்புடன் அனுப்பி வைக்க போலீசாரை நிறுத்த
ஏற்பாடு செய்துள்ளனர்.

