தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ கருப்பு துணி கட்டி ஊர்வலம் போலீசார் தடுத்ததால் பரபரப்பு

கருப்பு துணி கட்டி ஊர்வலம் போலீசார் தடுத்ததால் பரபரப்பு

கருப்பு துணி கட்டி ஊர்வலம் போலீசார் தடுத்ததால் பரபரப்பு


ADDED : மார் 31, 2026 05:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 31, 2026 05:34 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ராசிபுரம், தமிழகத்தில், வரும் ஏப்., 23ல் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதையொட்டி, அ.தி.மு.க.,- தி.மு.க.,-நா.த.க.,-த.வெ.க., உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள், நேற்று முதல் வேட்புமனுக்களை தாக்கல் செய்ய தொடங்கி உள்ளனர். இதற்காக தாசில்தார் அலுவலகங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, தீவிர கண்காணிப்பு பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், ராசிபுரம்(தனி) சட்டசபை தொகுதியில், நா.த.க., வேட்பாளர் சசிகலா, நேற்று ராசிபுரம் புதிய பஸ் ஸ்டாண்டிலிருந்து ஊர்வலமாக ராசிபுரம் தாசில்தார் அலுவலகத்தை நோக்கி சென்றனர்.

அப்போது, வேட்பாளர் சசிகலா மற்றும் கட்சி நிர்வாகிகள் அனைவரும் தங்களது கண்களில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு ஊர்வலமாக செல்ல முயன்றனர். இதை பார்த்த போலீசார், உடனடியாக அவர்களைத் தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர். கண்களில் துணி கட்டி ஊர்வலமாக செல்ல அனுமதி இல்லை எனக்கூறி, போலீசார் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து, போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையால், கருப்பு துணியை அகற்றினர். அதன் பின் மனுதாக்கல் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us