ADDED : மே 31, 2026 03:04 AM

பள்ளிப்பாளையம்:நாமக்கல்
மாவட்ட எல்லையான, பள்ளிப்பாளையம் பாலம் பகுதியில், மூன்று
ஆண்டுகளுக்கு மேலாக மூடப்பட்டு, காட்சி பொருளாக சோதனைச்சாவடி காணப்படுகிறது.
நாமக்கல் மாவட்ட எல்லையான பள்ளிப்பாளையம்
பகுதியில், காவிரி ஆற்றின் குறுக்கே பழைய பாலம் உள்ளது. ஈரோடு மாவட்டம்
எல்லையில் இருந்து வரும் வாகனங்கள், இந்த பழைய பாலத்தின் வழியாக தான்,
நாமக்கல் மாவட்டத்திற்கு நுழைய முடியும். பழைய பாலத்தில் பல ஆண்டுகளாக
சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு, ஈரோடு மாவட்டத்தில் இருந்து வரும்
வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டன. குறிப்பாக, இரவு நேரத்தில் வாகன
தணிக்கை தீவிரமாக நடந்தது.
மேலும் நாமக்கல் மாவட்டத்தில், எந்த
பகுதியில் குற்ற செயல்கள் நடந்தாலும், பள்ளிப்பாளையம்
சோதனைச்சாவடியில் சோதனை நடத்தப்படும். இதில் பல குற்றவாளிகள்
பிடிபட்டுள்ளனர். ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளாக சோதனைச்சாவடி
மூடப்பட்டு காட்சி பொருளாக காணப்படுகிறது.
கடந்த சில மாதங்களாக,
பள்ளிப்பாளையம் பகுதியில் இரவில் மர்ம நபர்கள் நடமாட்டம்
அதிகரித்துள்ளது. சோதனைச் சாவடி இல்லாததால் சர்வ சாதாரணமாக சமூக
விரோதிகள் உலா வருகின்றனர். எனவே, மீண்டும் சோதனைச்சாவடியை
பயன்பாட்டிற்கு கொண்டு வந்து, சுழற்சி முறையில் போலீசாரை நியமிக்க,
மாவட்ட எஸ்.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும்.
