/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
டூவீலர் விற்பனையாளர்களுடன் போலீசார் ஆலோசனை கூட்டம்
/
டூவீலர் விற்பனையாளர்களுடன் போலீசார் ஆலோசனை கூட்டம்
டூவீலர் விற்பனையாளர்களுடன் போலீசார் ஆலோசனை கூட்டம்
டூவீலர் விற்பனையாளர்களுடன் போலீசார் ஆலோசனை கூட்டம்
ADDED : ஜூன் 25, 2025 01:28 AM
குமாரபாளையம், சில நாட்களுக்கு முன், மதுரையிலிருந்து டூவீலர்கள் திருடி வந்த ஒருவர், குமாரபாளையத்தை சேர்ந்த மூன்று பேரிடம் குறைந்த விலைக்கு விற்பனை செய்துள்ளார். அவர்கள், அந்த டூவீலரை அதிக விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, நான்கு பேரையும் போலீசார் கைது செய்து, 14 டூவீலர்களை பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக, பழைய டூவீலர்கள் விற்கும் ஆட்டோ பைனான்ஸ் உரிமையாளர்களுடன், குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் தவமணி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. அப்போது அவர் பேசுகையில், ''அனைத்து டூவீலர்களையும் உரிய அசல் ஆவணங்களுடன் தான் விற்க வேண்டும். அதிகாரிகள் சோதனைக்கு வரும்போது, அனைத்து வாகனங்களின் அசல் ஆவணங்களை காண்பிக்க வேண்டும். திருடப்பட்ட வாகனங்களை எக்காரணத்தை கொண்டும் வாங்கவோ, விற்கவோ கூடாது. மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.