ADDED : நவ 26, 2025 01:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம் போலீசார், நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஒட்டமெத்தை பகுதியில் தனியார் கால் டாக்ஸி ஒன்று வேகமாக வந்துள்ளது. இந்த காரை, போலீசார் நிறுத்தி தணிக்கை செய்தனர். பயணிகள் யாரும் இல்லை. ஆனால், தாஜ்நகரை சேர்ந்த கார் டிரைவர் ராஜ்விக்னேஷ், 29, மது போதையில் இருந்தது
தெரியவந்தது.
இதையடுத்து, மது போதையில் இருந்த கார் டிரைவரை, பள்ளிப்பாளையம் போலீசார், மருத்துவ பரிசோதனைக்கு, அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அங்கு, மருத்துவ பரிசோதனைக்கு ஒத்துழைக்காமல் அங்கிருந்த மருத்துவர்கள், போலீசாருடன் ரகளையில் ஈடுபட்டார்.
இதையடுத்து, அவரை சமரசம் செய்த போலீசார், உரிய மருத்துவ பரிசோதனைக்கு பின், கார் டிரைவர் ராஜ் விக்னேஷ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

