/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வீட்டில் நகை திருட்டு போலீசார் விசாரணை
/
வீட்டில் நகை திருட்டு போலீசார் விசாரணை
ADDED : மே 27, 2025 01:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குமாரபாளையம், குமாரபாளையம் கிழக்கு காவேரி நகரை சேர்ந்தவர் குருநாதன், 60; விசைத்தறி தொழிலாளி.
இவரும், இவரது மனைவியும், கடந்த, 17ல் உறவினர் வீட்டு விசேஷத்திற்கு பொள்ளாச்சி சென்று விட்டு, நேற்று முன்தினம் காலை, 7:00 மணிக்கு வீடு திரும்பினர். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் வைக்கப்பட்டிருந்த மோதிரம், தோடு உள்ளிட்ட, ஐந்து கிராம் தங்க நகை, கால் செயின், அரைஞாண் கயிறு உள்ளிட்ட, 85 கிராம் வெள்ளி நகைகள் திருடப்பட்டிருந்தன. இதுகுறித்து புகார்படி, குமாரபாளையம் போலீசார், நகைகளை திருடிய மர்ம நபர் குறித்து விசாரித்து வருகின்றனர்.

