/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தொழிலாளியிடம் மொபைல் திருடியவருக்கு போலீசார் வலை
/
தொழிலாளியிடம் மொபைல் திருடியவருக்கு போலீசார் வலை
ADDED : ஜூலை 18, 2025 01:54 AM
பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம் அருகே, மாதேஸ்வரன் கோவில் பஸ் ஸ்டாப் பகுதியில் உள்ள பஞ்சர் ஒட்டும் கடையில் விக்னேஷ், 30, என்பவர் வேலை செய்து வருகிறார். நேற்று இரவு, வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு, கடைக்கு வெளியே துாங்கினார். உடன், புதிதாக வாங்கிய, 14,000 ரூபாய் மதிப்புள்ள மொபைல் போன், 1,500 ரூபாய் மதிப்புள்ள ஏர்பட்ஸ் ஆகியவற்றை அருகிலேயே வைத்திருந்தார். காலையில் எழுந்து பார்த்தபோது மொபைல் போன் காணவில்லை.
கடைக்கு வெளியே பொருத்தப்பட்டிருந்த, 'சிசிடிவி' கேமராவை பார்த்தபோது, அதிகாலை, 2:00 மணிக்கு, 40 வயதுடைய மர்ம நபர் ஒருவர் வந்து, மொபைல் போன், ஏர்பட்ஸ் ஆகியவற்றை திருடிச் சென்றது தெரிந்தது. இதுகுறித்து புகார்படி, பள்ளிப்பாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.