/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஆசிரியரிடம் 3 பவுன் பறிப்பு மர்ம நபருக்கு போலீசார் வலை
/
ஆசிரியரிடம் 3 பவுன் பறிப்பு மர்ம நபருக்கு போலீசார் வலை
ஆசிரியரிடம் 3 பவுன் பறிப்பு மர்ம நபருக்கு போலீசார் வலை
ஆசிரியரிடம் 3 பவுன் பறிப்பு மர்ம நபருக்கு போலீசார் வலை
ADDED : நவ 14, 2024 07:21 AM
நாமக்கல்: தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர் பத்மாபாந்தவி, 47. இவர், நாமக்கல்லில் உள்ள தனியார் பள்ளியில், ஆசிரியராக பணி-யாற்றி வருகிறார். நாமக்கல் - பரமத்தி சாலை இ.பி., காலனியில் வாடகை வீட்டில் தங்கி, பள்ளிக்கு சென்று வருகிறார்.
நேற்று முன்தினம் வழக்கம்போல் காலையில் பள்ளிக்கு சென்றவர், மாலை, 5:30 மணிக்கு வீடு திரும்பினார். வீட்டின் நுழைவு வாயிலை திறக்க முயன்றார். அப்போது, டூவீலரில், 'ஹெல்மெட்' அணிந்து வந்த, 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், திடீரென பத்மா பாந்தவி கழுத்தில் அணிந்திருந்த, 5 பவுன் தாலிக்கொ-டியை பறித்துள்ளார். அதிர்ச்சி அடைந்தவர், தாலிக்கொடியை இறுக பிடித்துக்கொண்டார். அதில், தாலிக்கொடியின்
ஒரு பாதி தப்பியது. மற்றொரு பாதி, 3 பவுன் செயினை பறித்துக்கொண்டு வாலிபர் தப்பினார். இதுகுறித்து புகார்படி, நாமக்கல் போலீசார் மர்ம நபரை தேடி வருகின்றனர்.