/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
டீ மாஸ்டர் சாவில் திருப்பம் 4 பேரிடம் போலீஸ் விசாரணை
/
டீ மாஸ்டர் சாவில் திருப்பம் 4 பேரிடம் போலீஸ் விசாரணை
டீ மாஸ்டர் சாவில் திருப்பம் 4 பேரிடம் போலீஸ் விசாரணை
டீ மாஸ்டர் சாவில் திருப்பம் 4 பேரிடம் போலீஸ் விசாரணை
ADDED : ஆக 06, 2025 01:05 AM
எருமப்பட்டி, எருமப்பட்டி அருகே, காவக்காரன்பட்டியை சேர்ந்தவர் டீ மாஸ்டர் முருகன், 42; கடந்த, 3ல் எருமப்பட்டி அருகே, பிடாரியம்மன் கோவில் பின்புறம் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இவரது உடலை எருமப்பட்டி போலீசார் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக, நாமக்கல் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டுச்சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், 'டீ மாஸ்டர் முருகன் மருந்து குடித்து உயிரிழக்கவில்லை; தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்' என, தெரிவித்தனர்.
இதையடுத்து எருமப்பட்டி போலீசார், இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து, பெண் உள்பட, நான்கு பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர். டீ மாஸ்டர் விஷம் குடித்து உயிரிழந்ததாக வழக்குப்பதிவு செய்த நிலையில், கொலை வழக்காக மாற்றப்பட்ட சம்பவம் எருமப்பட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.